Endhiran Rajini with Political Dialogues
எந்திரன் படத்தில் மீண்டும் அரசியல் பேச்சை எடுக்கிறார் ரஜினி . ‘பொதுவான அரசியல்’ நிலைமைகளைச் சாடுவது போன்ற ஒரு பாடலை இந்தப் படத்தில் அவரே படிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
பொதுவாக திரைப்படங்களில் அரசியலைத் தவிர்ப்பது போல பாவனை செய்தாலும், படத்துக்குப் படம் தொடர்ந்து அரசியல் பேசி வருபவர் ரஜினி. நிஜத்தில் பேச மறுத்தாலும் படங்களில் ப்ஞ்ச் வசனங்கள் மூலம் தனது அரசியல் கருத்துக்களைக் கூறிவிடுவார்.
இப்போது சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களின் அடிப்படையில் எந்திரன்-தி ரோபோ என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில் அவருக்கு இரட்டை வேடம்.
விஞ்ஞானியாகவும், இன்னொரு வேடத்தில் ரோபோவாகவும் வருகிறார்.
இதில் ரோபோ கேரக்டர் நடப்பு அரசியலை விமர்சனமாக வெளுத்துக் கட்டுவது போல காட்சிகள் உள்ளதாம். சுஜாதா தனது நாவலிலேயே அனல் பறக்கும் அரசியல் வசனங்களை சற்று எள்ளல் கலந்த நடையில் சொல்லியிருப்பார்.
கிட்டத்தட்ட அதே வசனங்களை இயக்குநர் இந்தப் படத்திலும் கையாண்டிருப்பதால், பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
இந்தப் படத்தின் ஒரு முக்கிய காட்சியில் இன்றைய அரசியல் போக்கை ரஜினி விமர்சனம் செய்வது போன்ற கவிதை வருகிறதாம்.
இந்தக் கவிதைய படு காட்டமாக எழுதியிருக்கிறாராம் கவிஞர் நா .முத்துக்குமார். முதலில் இந்தப் பாடலை எழுதச் சொல்லி வைரமுத்துவிடம் கேட்டிருக்கிறார்கள் ரஜினியும் ஷங்கரும்.
அவருக்கு எதிர்காலத்தில் வரவேண்டிய விருதுகள் மற்றும் சலுகைகள் நினைவுக்கு வந்துவிட்டது போலிருக்கிறது.. ‘ஆளை விடுங்க சாமி.. நம்மால அப்படி ஒரு கவிதை எழுதித் தர முடியாது. தேவையற்ற சிக்கல் வேணாம். ஏற்கெனவே அனுபவிச்சிட்டேன்’ என்றாராம்.
not good stiils. we still expect more from rajini. like vishnu anna
Good film, rajani is real star. star super star.